சில் என்ற காலையில்
கத கத போர்வையில்
கண்விழிதும் உறங்க வேண்டுமென்று
சின்ன சின்ன ஆசை
பூக்களால் கோலமிட்டு
புன்னகையால் வண்ணமிட்டு
பொங்கவேண்டும் பூரிப்பென்று
சின்ன சின்ன ஆசை
சின்னதாய் வீட்டிற்க்குள்
அழகான சித்திரங்கள்
வரைந்துவைக்க வேண்டுமென்று
சின்ன சின்ன ஆசை
அமைதியான ஆற்றங்கரையில்
அழகான நதின் மடியில்
ஆழ்ந்தமர்ந்து ரசிதிடவேண்டுமென்று
சின்ன சின்ன ஆசை
சொந்த பந்தம் சூழ்ந்திருக்க
நண்பர் கூட்டம் அருகிருக்க
நமதூரில் நாளும் வாழ்ந்திட
சின்ன சின்ன ஆசை
Wednesday, January 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment